ஊர்க்காவல்படை வீரர் குடும்பத்துக்கு நிதியுதவி !

உயிரிழந்த ஊர்க்காவல்படை வீரர் விஸ்வநாதனின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிய கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு.;

Update: 2025-10-19 15:13 GMT
ஊர்க்காவல்படையில் பணியாற்றி வந்த கோவைச் சேர்ந்த வீரர் விஸ்வநாதன் கடந்த ஆண்டு டிசம்பரில் உயிரிழந்தார். அவருடைய குடும்பத்துக்கு தமிழ்நாடு ஊர்க்காவல்படை சேமநிதியிலிருந்து ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், வீரரின் மனைவி விஜயலட்சுமியிடம் நிதியுதவியை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஊர்க்காவல்படை பிரதேச தளபதி சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News