தளி அருகே தூக்கிட்டு தொழிலாளி தற்கொலை.
தளி அருகே தூக்கிட்டு தொழிலாளி தற்கொலை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள பின்னமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (44). தொழிலாளி. இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் முனிராஜ்க்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது இதனால் கணவன்-மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனையால் அவர் மனவேதனையில் காணப்பட்டார். இந்தநிலையில் கடந்த 17-ஆம் தேதி அன்று வீட்டில் முனிராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.