தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்பு வழங்கல்
தீபாவளி பரிசுத் தொகுப்பு வழங்கல்;
தென்காசி மாவட்ட பாஜக சாா்பில் வாசுதேவநல்லூா் பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. ராயகிரி, வாசுதேவநல்லூா், சிவகிரி பேரூராட்சிகள், பந்தபுளி, ரெட்டியபட்டி, பெருமாள்பட்டி, சென்னிகுளம் , கரிவலம்வந்தநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு வேட்டி, சேலை, இனிப்பு, பட்டாசு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய தீபாவளி பரிசுத் தொகுப்பை தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன்அய்யாசாமி வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.