கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேஷ்குமார் நேற்று முன்தினம் சட்டசபையில் பேசிய போது, கொல்லங்கோடு நகராட்சியில் பஸ் நிலையம் அமைக்க கடந்த 2024 ஆம் ஆண்டு ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிலம் கையகப் படுத்தியும் இதுவரையும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. இந்த பணிகள் விரைந்து தொடங்கப்படுமா? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் நேரு காலதாமதத்திற்கான காரணம் அதிகாரியுடன் கலந்து பேசி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும்,நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு அந்தத் திட்டத்திற்கு எந்த தடையும் இல்லை என தெரிவித்தார்.