கோவை: கனமழை - அன்னூரில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது!

Update: 2025-10-20 13:53 GMT
கோவையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு 9 மணி அளவில் தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டித்தீர்ந்தது. இதனால் லங்கா கார்னர் ரெயில்வே பாலம், அவினாசி ரோடு பழைய மேம்பாலம், கிக்கானி பள்ளி ரெயில்வே பாலம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது. கலெக்டர் பவன்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு செய்தனர். மழை காரணமாக சிறுவாணி அணை நீர்மட்டம் 37 அடியாக உயர்ந்தது. அணையிலிருந்து தினசரி 97 எம்.எல்.டி. குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. அன்னூரில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் அவதிப்பட்டனர். அன்னூர் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் மற்றும் வட்டாட்சியர் யமுனா நிலையை நேரில் ஆய்வு செய்து, மழைநீர் செல்லும் வழிகளில் அடைப்புகளை அகற்றி நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். கோவையில் அடுத்த சில நாட்களிலும் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவையில் பெய்த மழை அளவு முக்கிய இடங்களில்: அன்னூர் - 62.4 மி.மீ., வாரப்பட்டி - 88 மி.மீ., மாக்கினாம்பட்டி - 119 மி.மீ., பொள்ளாச்சி - 85 மி.மீ., சிறுவாணி அணை - 35 மி.மீ. என பதிவானது.

Similar News