சூலூரில் அரிய வவ்வால்களை பாதுகாக்க சரணாலயம் அமைக்கும் கிராம மக்கள் !
அரிய வவ்வால்களை பாதுகாக்க 26 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராமம்.;
கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கிட்டாம் பாளையம் கிராமத்தில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய வகை வவ்வால்கள் வாழ்கின்றன. இவ்வவ்வால்களை பாதுகாக்கும் நோக்கில், கடந்த 26 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்காமல் கிராம மக்கள் முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர். ஆலமரம், புளியமரம் போன்ற மரங்களில் வசிக்கும் இவ்வவ்வால்கள் புனிதமானவை என கருதப்படுவதால், பறவை காய்ச்சல் காலத்திலும் கூட மக்கள் அவற்றைத் துன்புறுத்தாமல் பாதுகாத்து வருகின்றனர். தற்போது, இவ்வவ்வால் இனங்களை நிலைத்திடமாகப் பாதுகாக்க கிராம மக்கள் சரணாலயம் அமைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளனர். இதற்காக மரங்கள் நடுதல், குளங்கள் மற்றும் குட்டைகளை தூர்வாருதல் போன்ற பணிகள் நடைபெற்று வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.