கோவையில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம் — இரவு முதலே பட்டாசு வெடித்து உற்சாகம்!

குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஒளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.;

Update: 2025-10-20 14:53 GMT
தீபாவளி பண்டிகையை வரவேற்கும் வகையில் கோவையில் நேற்று இரவு முதலே கொண்டாட்டம் களைகட்டியது. ஒளி பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு, நகரின் சிங்காநல்லூர், கணபதி, ராமநாதபுரம், சாய்பாபா காலனி, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுவர், சிறுமியர் உற்சாகமாக பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர். குடும்பத்தினர் வீட்டின் முன்பு விளக்குகள் ஏற்றி தீபாவளி மகிழ்ச்சியில் கலந்து கொண்டனர். நகரம் முழுவதும் பண்டிகை உற்சாகம் பரவியதால், கோவை முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியிருந்தது.

Similar News