கோவை: வெருச்சோடி காணப்பட்ட உக்கடம் மீன் மார்க்கெட்!
தீபாவளி நாளில் மீன் சந்தையில் விலை உயர்வு மற்றும் வருகை குறைவு.;
புரட்டாசி மாதம் முடிந்தும், கோவை உக்கடம் மீன் சந்தை தீபாவளி தினமான இன்று வழக்கத்தைவிட வெறுசோடி காணப்பட்டது. புரட்டாசி விரதம் முடிந்த பின் பொதுவாக மக்கள் கூட்டம் அதிகரிக்கும் நிலையில், தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையிலும் மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. மீன் வரத்து குறைந்ததுடன் விலைகளும் உயர்ந்துள்ளன. மத்தி கிலோ ரூ.80–250, வாவல் ரூ.250–500, பாறை ரூ.240–350, வஞ்சரம் ரூ.450–700, நண்டு ரூ.500, அயிலை ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டது.