டெலிவரி செய்த பார்சலில் இருந்து இனிப்பை திருடிய வாலிபர் – சிசிடிவி காட்சிகள் வைரல்!
டெலிவரி ஊழியர் பார்சலில் இருந்த இனிப்புகளை திருடிய சம்பவத்தால் பரபரப்பு.;
கோவை கணபதி பகுதியை சேர்ந்த ஷர்மி, ராப்பிடோ பைக் டாக்ஸி பார்சல் சேவையின் மூலம் கீரணத்தம் பகுதியில் உள்ள உறவினருக்கு தீபாவளி பரிசு மற்றும் இனிப்புகள் கொண்ட பார்சலை அனுப்பினார். அந்த பார்சலை டெலிவரி செய்யச் சென்ற ஶ்ரீஹரி என்ற வாலிபர், ஆப்பில் குறிப்பிடப்பட்டிருந்த தொகை போதாது என்று கூறி, கூடுதலாக ₹300 கேட்டதாக கூறப்படுகிறது. பணம் அனுப்பிய பின்னர், அவர் கேட்டுக்குள் பார்சலை வைத்து விட்டு செல்லும்படி கூறப்பட்டார். ஆனால், கோபத்தில் இருந்த ஶ்ரீஹரி, பார்சலில் இருந்த இனிப்புப் பெட்டியை எடுத்துச் சென்று, அலங்கார விளக்கை உடைத்ததாக சிசிடிவி காட்சிகள் தெரிவிக்கின்றன. இதைக் கண்ட உறவினர் கீழே ஓடி வந்து எதிர்த்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஶ்ரீஹரி பொருட்களை தூக்கி வீசி பைக்கில் தப்பி சென்றார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணிப்புரியும் சில டெலிவரி ஊழியர்கள் கூடுதல் பணம் கேட்பது, சிறு திருட்டுகள் செய்வது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால், கடுமையான நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.