பொள்ளாச்சி அருகே ஆஞ்சநேயர் கோவிலில் வெள்ளத்தில் சிக்கிய காவலர்கள் !

வெள்ளத்தில் சிக்கிய காவலர்களை கயிறு கட்டி வீரர்கள் மீட்டனர்.;

Update: 2025-10-20 16:16 GMT
பொள்ளாச்சி அருகே பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு காவலர்களை தீயணைப்புத் துறை வீரர்கள் உயிருடன் மீட்டனர். ஆனைமலை சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவில் வெள்ளநீரால் சூழப்பட்டது. அங்கு இரவு காவலராக பணிபுரிந்த மகாலிங்கம் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் வெள்ளத்தில் சிக்கினர். தகவல் பெறப்பட்டதும் பொள்ளாச்சி தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி கயிறு உதவியுடன் இருவரையும் கரைக்கு மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவில் ஆற்றின் நடுப்பகுதியில் இருப்பதால் இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி இடம்பெறுவதாகவும், இதனைத் தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News