நான்கு செல்போன் கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை!
தூத்துக்குடியில் நேற்று நள்ளிரவு பள்ளிவாசல் அருகே அமைந்துள்ள தெற்கு புது தெரு பகுதியில் அமைந்துள்ள நான்கு செல்போன் கடைகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பொருட்களை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு;
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட செல்போன் விற்பனை செய்யும் மற்றும் செல்போன் பழுது பார்க்கும் கடைகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு பள்ளி வாசல் அருகே உள்ள தெற்கு புது தெரு பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் உள்ள செல்போன் கடை மற்றும் செல்போன் பழுது பார்க்கும் கடைகளில் ஒரே நாள் இரவில் மர்ம நபர் கடைகளில் முன்பு உறங்குவது போல் நடித்த படி கடைகளில் பூட்டை உடைத்து செல்போன்கள் மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளார் இந்த திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக மத்திய பாகம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன் மர்ம நபர்கள் எவ்வளவு ரூபாய் மதிப்பிலான செல்போன் மற்றும் பணம் கடை திருடி சென்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் ஒரே நாளில் நான்கு கடைகளில் மர்மநபர்கள் பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.