துப்பாக்கியுடன் வேட்டையாட சென்றவர் கைது
வடமதுரை அருகே துப்பாக்கியுடன் வேட்டையாட சென்றவர் கைது - துப்பாக்கி, வெடி மருந்துகள், டார்ச் லைட்கள், டூவீலர் பறிமுதல்;
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, ஆலம்பட்டி ரோட்டில் வேலாயுதம்பாளையம் வள்ளிக் கரடு வனப்பகுதியில் அய்யலுார் வனத்துறையினர் ரோந்து சென்ற போது அப்பகுதியில் துப்பாக்கியுடன் வனவிலங்குகளை வேட்டையாட வந்திருந்த திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி, எல்லைக்காட்டுப்பட்டியை சேர்ந்த கருப்பையா(43) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து துப்பாக்கி, வெடி மருந்துகள், டார்ச் லைட்கள், டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.