காட்டெருமை தாக்கி கர்ப்பிணி பெண் மற்றும் கணவர் படுகாயம்

கொடைக்கானலில் காட்டெருமை தாக்கி கர்ப்பிணி பெண் மற்றும் கணவர் படுகாயம்;

Update: 2025-10-21 14:32 GMT
திண்டுக்கல், கொடைக்கானலை சேர்ந்த விக்கி(28) மற்றும் இவரது மனைவி 7 மாத கர்ப்பிணியான விஜி(27) இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஏரிச்சாலை கலையரங்கம் அருகே வந்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் கன்றுடன் உலா வந்த காட்டெருமை வாகனங்களின் சத்தம் கேட்டு மிரண்டு விஜி ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் மீது மோதி முட்டி தூக்கி வீசியது இதில் கர்ப்பிணிப் பெண் விஜிக்கு கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது கணவர் விக்கிக்கு முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் சத்தம் எழுப்பவே அப்பகுதியை விட்டு சென்றது அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு விஜி மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.

Similar News