பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை
திண்டுக்கல் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்;
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று(அக்.22) விடுமுறை இல்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளிகளுக்குச் சென்று வர வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.