பெரும்பாறை மலைப்பகுதியில் காபி பழம் அறுவடை சீசன் தொடங்கியது

பட்டிவீரன்பட்டி அருகே, பெரும்பாறை மலைப்பகுதியில் காபி பழம் அறுவடை சீசன் தொடங்கியது;

Update: 2025-10-22 04:03 GMT
திண்டுக்கல் மாவட்டம், பெரும்பாறை மலைப்பகுதியில் தாண்டிக்குடி, மஞ்சள்ப்பரப்பு, கொங்கப்பட்டி, பூலத்தூர், கும்பரையூர், மங்களங்கொம்பு, கும்பம்மாள்பட்டி உள்ளிட்ட கீழ் பழனிமலைப் பகுதிகளில் பாரம்பரியமாக காபி சாகுபடி நடந்து வருகிறது. தற்போது பெரும்பாறை மலைப்பகுதியில் காபி பழங்களை செடியிலிருந்து பறிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பறிக்கப்பட்ட காபி பழங்களை வெயிலில் உலர வைத்து, இயந்திரங்கள் மூலம் பழங்களில் உள்ள வெளித்தோல் நீக்கப்படுகிறது. பின்னர் கழுவி சுத்தம் செய்கின்றனர். இவ்வாறு சுத்தம் செய்து காபி தளர்களை காபி கொட்டைகளாக மாற்றுவதற்காக மொத்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

Similar News