பனிமய மாதா பேராலயம் அருகே அரிவாள் வெட்டு பரபரப்பு!
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் அருகே அரிவாள் வெட்டு பரபரப்பு!;
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் பகுதியில் மது போதையில் வாகனம் ஓட்டிய இளைஞரை கண்டித்த இளைஞருக்கு அரிவாள் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேராலயம் பின்புறம் நின்றிருந்த இன்ஃபெண்ட் ரோசஸ் என்ற இளைஞர், கடுமையான மதுபோதையில் பைக்கை அதிவேகமாக ஓட்டிய ராஜா என்ற இளைஞரிடம் மெதுவாக செலுத்துமாறு கூறியதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சில நேரம் கழித்து ராஜா, தனது சகோதரர் சதீஷ் மற்றும் நண்பர் மனோஜ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பேராலயம் வளாகத்துக்கு வந்து, இன்ஃபெண்ட் ரோசஸை சரமாரியாக தாக்கியுள்ளனர். தாக்குதலில் கையை உயர்த்தி தடுத்த ரோசஸ் கடுமையாக காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தாக்குதலாளிகளை விரட்டியதோடு, காயமடைந்த ரோசஸை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட ராஜா, சதீஷ் உள்ளிட்டோருக்கு முந்தைய அடிதடி மற்றும் சேதப்படுத்தல் வழக்குகளும் இருப்பதாக தகவல். உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலய வளாகத்திலேயே நடந்த இந்த சம்பவம், பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 📍 காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.