கோவை: நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பு – வழக்குப் பதிவு

கருமத்தம்பட்டியில் இரவு நேரத்தில் பட்டாசு வெடிப்பு – இருவர் மீது நடவடிக்கை.;

Update: 2025-10-23 05:58 GMT
கோவை சூலூர் தாலுகா கருமத்தம்பட்டி ராயர் பாளையம் பகுதியில், அரசு நிர்ணயித்த நேரத்தை மீறி, மிகுந்த சத்தத்துடன் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் புகார் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற கருமத்தம்பட்டி காவல்துறையினர், பட்டாசு வெடிப்பில் ஈடுபட்ட சுபாஷ் மற்றும் சூர்யா என்ற இருவர்மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக நேற்று இரண்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

Similar News