தாளியூரில் காட்டுயானை உலா — சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

சிசிடிவியில் பதிவான யானை — இரவு நேரங்களில் மக்கள் அச்சம்.;

Update: 2025-10-23 07:45 GMT
கோவை மாவட்டம் தாளியூர் பகுதியில் நேற்று நள்ளிரவு ஒற்றைக் காட்டுயானை ஊருக்குள் நுழைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் தகவல் அறிந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். சமீபத்தில் தடாகம், பன்னிமடை, மடத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வனவிலங்குகள் ஊர் நுழைவு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இரவு நேரங்களில் மக்கள் வெளியே செல்ல அஞ்சுவதாகவும், இதற்கு வனத்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனர்.

Similar News