கோவை: தி.மு.க. மக்கள் விரோத அரசு -நயினார் நாகேந்திரன் பேட்டி !
தி.மு.க. அரசின் சாதனை ₹790 கோடி மது விற்பனை மட்டுமே - நயினார் கடுமையாக விமர்சனம்.;
பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வரும் 28-ம் தேதி கோவைக்கு வருகிறார். அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். தமிழருக்கு துணை ஜனாதிபதி பொறுப்பு வழங்கியதில் பா.ஜ.க.வுக்குப் பங்குண்டு. முதலமைச்சர் டெல்டா மாவட்டங்கள் குறித்து அக்கறை கொள்ளவில்லை. மத்திய அரசு நிதி வழங்கியும் அமைச்சர்கள் உண்மை பேசுவதில்லை. ₹5 ஆயிரம் கோடி செலவு செய்ததாக அரசு சொல்கிறது. ஒரு முட்டைக்கு 40 கமிஷன் கேட்கிறார்கள். அரசு ஊழியர்கள் போராட்டம் நியாயமானது. தி.மு.க. மக்கள் விரோத அரசாக உள்ளது. மகளிர் உரிமைத்தொகை முழுமையாகக் கொடுக்கப்படவில்லை. தி.மு.க.வின் சாதனை ₹790 கோடி மது விற்பனை மட்டுமே. பைசன் படம் பார்த்தீர்களா? என்ற கேள்விக்கு, எனக்கு பைசல் பண்ணத் தெரியும்; பைசன் தெரியாது என்று பதிலளித்தார். குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டர் விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.