ராசிபுரம் முருகன் கோயில்களில் கந்த சஷ்டி முன்னிட்டு சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..

ராசிபுரம் முருகன் கோயில்களில் கந்த சஷ்டி முன்னிட்டு சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..;

Update: 2025-10-23 16:35 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி மற்றும் ஸ்ரீ ஆறுமுக சுப்பிரமணிய சுவாமி க்கு கந்த சஷ்டி தொடக்க விழா இரண்டாம் நாள் முன்னிட்டு ஸ்ரீ பால தண்டாயுதபாணி சாமிக்கும், ஸ்ரீ ஆறுமுக சுப்பிரமணியசாமிக்கும், சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. முன்னதாக பால், தயிர், மஞ்சள், சந்தனம், திருநீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஆறுமுக சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை உற்சவர் கோவில் திருத்தேரில் எழுந்தருளி கோவிலை சுற்றி பக்தர்களால் திருத்தேரை இழுத்து வரப்பட்டு வலம் வந்தனர். பின்னர் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று பொதுமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து தினந்தோறும் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பல்வேறு கட்டளைதாரர்கள் அபிஷேக, ஆராதனைகள் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News