ஒசூரில் போலி பெண் மருத்துவர் கைது.

ஒசூரில் போலி பெண் மருத்துவர் கைது.;

Update: 2025-10-23 23:27 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நரசிம்மா காலனியை சேர்ந்தவர் ஜெபின் பானு(55). இவர் அந்த பகுதியில் உள்ள தனது வீட்டிலேயே, நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். அவர் முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக, வந்த புகாரின் பேரில் ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் லட்சுமி மற்றும் ஓசூர் சரக மருந்துகள் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.ஜெபின் பானு முறையாக மருத்துவம் மற்றும் நர்சிங் படிக்கவில்லை என்பது தெரியவந்தது. அட்கோ போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அவரை கைது செய்தனர்.

Similar News