மத்தூர் அருகே மாரியம்மன் கோவிலில் நகை திருட்டு.

மத்தூர் அருகே மாரியம்மன் கோவிலில் நகை திருட்டு.;

Update: 2025-10-24 02:18 GMT
கிருஷ்ணகிரி மத்தூர் அருகேயுள்ள ஒட்டப்பட்டி கிராமத்தில் வேட்றப்பட்டி மாரியமமன் கோயில் உள்ளது. நேற்று காலை பூஜை செய்ய பூசாரி சக்திவேல் வந்தார். அப்போது கோயிலின் முன்பு இருந்த கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டுஇருப்தை கண்டு அதிர்ச்சி அடைந்த சக்திவேல் உள்ளே சென்று பார்த்தார். அங்கு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அம்மன் கழுத்தில் அணிந்து இருந்த வெள்ளி தாலி, சரடு, திருட்டு போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News