புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே நரங்கியப்பட்டு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை சிதிலமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதாக தெரிகிறது. தற்போது பெய்த மழையால் சாலை குளமாக மாறி வாகன ஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர். எனவே, புதிய தார் சாலை அமைத்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.