கந்தர்வகோட்டை பகுதியைச் சேர்ந்த நடராஜன் (45) என்பவர் தஞ்சை, கபிஸ்தலம் அருகே செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். இவருடைய அக்கா ராணி குடும்ப பிரச்சனை காரணமாக கணவர் சின்னதம்பியை பிரிந்து நடராஜனுடன் வசித்து வந்துள்ளார். ராணியை மீண்டும் சேர்ந்து வாழ சின்னதம்பி அழைத்தபோது, நடராஜன் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த சின்னத்தம்பி, நடராஜனை துண்டினால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.