புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பங்களா குளத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.53 லட்சம் மதீப்பீட்டில் போடப்பட்ட பேவர் பிளாக் சாலை இரண்டே மாதங்களில் குண்டு குழியுாக மாறிய அவலம், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அச்சம் அடைந்து வருகின்றனர். உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.