புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, கல்லாக்கோட்டை, பந்துவக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு நாட்களுக்கு முன்பாக பெய்த மழையின் காரணமாக ஏராளமான நெல் முட்டைகள் பாதிப்படைந்தன. இவற்றை ஆய்வு செய்ய ஒன்றிய குழு இன்று ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் செல்வதால் ஆய்வுப் பணி திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.