ரியல் எஸ்டேட் தொழில் இருவரிடையே மோதல் ஒருவர் கொலை
வெள்ளகோவில் அருகே ரிலிஸ்டேட் தொழில் காரணமாக இளைஞர் கார் ஏற்றி பின்னர் இரும்பு ராடால் தாக்கி கொலை - கொலையாளி தலைமறைவு - காவல்துறை விசாரணை ;
காங்கேயம் வெள்ளகோவில் அருகே ரிலிஸ்டேட் தொழிலில் இருவருக்கும் இடையே பிரச்சனை. பைக்கில் சென்றவரை கார் வைத்து மோதி இரும்பு ராடால் தாக்கி கொலை. வெள்ளகோவில் காவல்துறை விசாரணை. பரபரப்பு வெள்ளகோவில் மேட்டுப்பாளையம் ஊராட்சி வரக்காளிபாளையதை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி(42), இவரின் உறவினரும் இவருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருமான ராஜ்குமார்( 45) இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ஈஸ்வரமூர்த்தி தந்தை கிட்ச்சாமி (எ) கிருஷ்ணமூர்த்தியுடன் இன்று 8 மணியளவில் எலக்ட்ரிக் பைக்கில் வீட்டில் இருந்து புஷ்பகிரி - வெள்ளகோவில் ரோட்டில் வரக்காளிபாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜ்குமார் டாடா சுமோ காரில் பின்னால் வந்து முன்னால் சென்று கொண்டிருந்த ஈஸ்வரமூர்த்தியின் பைக்கில் மோதி விபத்து ஏற்படுத்தியதில் ஈஸ்வரமூர்த்தியும் அவரது தந்தை கிட்டுச்சாமியும் கீழே விழுந்துவிட்டான். பின்னர் காரில் இருந்து இரும்பு ராடை எடுத்து வந்து கீழே விழுந்து கிடந்த ஈஸ்வரமூர்த்தியின் தலை மற்றும் தோள்பட்டையில் ஓங்கி அடித்து பின்னர் காரை மீண்டும் ஏற்றி உள்ளார். இதனால் ஈஸ்வரமூர்த்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்து இறந்து போயுள்ளார். இதைக்கண்ட ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே தனது காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். தந்தை கிட்டுச்சாமி கீழே விழுந்ததில் கை கால்களில் லேசான சிராய்ப்பு காயமும் மொக்கை அடியும் ஏற்பட்டுள்ளது. இறந்துபோன ஈஸ்வரமூர்த்தியின் பிரேதம் காங்கேயம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளகோவில் காவல்துறை தப்பி ஓடிய ராஜ்குமாரை தேடி வருகின்றனர். மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளகோவில் பகுதியில் உறவினர்களிடையே ஏற்பட்ட வரவு செலவு பிரச்சனையில் ஒருவர் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த ஈஸ்வரமூர்த்திக்கு திருமணமாகி இரண்டு ஆண் வாரிசுகளும் கொலை செய்த ராஜ்குமாருக்கு இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் வாரிசும் உள்ளது.