காங்கேயத்தில் துப்பாக்கி சுட்டு பயிற்சி எடுத்த நடிகர் அஜித் குமார் - வீடியோ வைரல் 

காங்கேயம் அருகே துப்பாக்கி சுட்டு பயிற்சி எடுத்த நடிகர் அஜித் குமார் - வீடியோ வைரல் ;

Update: 2025-10-26 11:04 GMT
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வெள்ளகோவில் அருகே லக்கமநாயக்கன்பட்டியில் கொங்குநாடு ரைபிள் கிளப் உள்ளது இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பயிற்சி எடுக்க துப்பாக்கி சுடும் வீரர்,வீராங்கனைகள் வந்து செல்வது வழக்கம். மேலும் தமிழ்நாட்டில் இது போல் பறக்கும் தட்டும் சுடும் பயிச்சி நிலையங்கள் மூன்றே இடத்தில் உள்ளது. காங்கேயம், புதுக்கோட்டை,சென்னை, ஆகிய பகுதிகளில் மட்டுமே உள்ளது. இங்கு பயிற்சி எடுத்த திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவி தனிஷ்கா செந்தில்குமார் (வயது 17), கோவையை சேர்ந்த பள்ளி மாணவன் எஸ்.எம்.யுகன் (14) ஆகியோர் பயிற்சி பெற்று கடந்த ஆகஸ்ட் மாதம் கஜகஸ்தானில் நடைபெற்ற 16-வது ஆசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொங்குநாடு ரைபிள் கிளப்பிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பயிற்சி எடுக்க வருகின்றனர். அதில் சினிமா நடிகர் அஜித்குமார் அடிக்கடி வந்து செல்வதாக பொதுமக்கள் கூறிவந்தனர். இந்த நிலையில் நேற்று இங்கு அஜித்குமார் பயிற்சி எடுக்கும் வந்ததாகவும் அங்கு உள்ள வசதிகளை பார்வையிட்டு துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் இது குறித்த வீடியோவை அவரது உதவியாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ தற்பொழுது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Similar News