குமாரபாளையம் அம்மன் நகரில் வசிப்பவர் கோவிந்தராஜ், 75. விசைத்தறி வேலை. இவரை இவரது இளைய மகன் விஜயகாந்த், 35, அக். 21ல் மாலை 03:30 மணியளவில், ஆனங்கூர் சாலை, பேடா கடையில் இறக்கி விட்டதாகவும், அது முதல் வீட்டுக்கு திரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குமாரபாளையம் போலீசில், மூத்த மகன் அர்த்தநாரீஸ்வரன், 40, புகார் செய்தார். குமாரபாளையம் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.