அரசு நூலகத்தில் வாசகர் வட்டஆலோசனை கூட்டம்
குமாரபாளையம் அரசு கிளை நூலகத்தில் வாசகர் வட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.;
குமாரபாளையம் அரசு கிளை நூலகத்தில் வாசகர் வட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. வாசகர் வட்டத்தின் சார்பாக ஒவ்வொரு மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமை அரசு கிளை நூலகத்தில் மாதம் ஒரு தலைப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெறும். இம்மாதம் தன்நெஞ்சே தன்னைச் சுடும் என்னும் தலைப்பில் கூட்டம் நடந்தது. விடியல் பிரகாஷ் தலைமை வகித்தார். சண்முகசுந்தரம் வரவேற்றார்.. கூட்டத்திற்கு வந்த அனைவரும் தன்நெஞ்சே தன்னைச் சுடும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினர்கள். எழுத்தாளர் கேசவமூர்த்தி ராஜகோபாலன், பஞ்சாலை சண்முகம் ஆகியோர் மாணவ மாணவர்களுக்கு சிறுகதைகள் எழுதுவதை பற்றி கூறினர்கள். சிறப்பு விருந்தினராக திருச்செங்கோட்டை சார்ந்த நகர வடிவமைப்பு ஆய்வாளர் பவித்ரன் பேசினார். பள்ளி மாணவ மாணவிகள் சிறுகதைகள் வாசித்துக் காட்டினார்கள். மாணவ மாணவிகளுக்கு நூலக உதவியாளர் தீபா மற்றும் தீனா பரிசாக புத்தகம் வழங்கினார்கள். ஜமுனா நன்றி கூறினார். கதிரவன், பவானி கார்த்திகேயன், விஜயராகவன், ராம்கி,ரேவதி,சுபத்ரா, மற்றும் வாசகர் வட்டத்தினர், உள்பட பலர் பங்கேற்றனர்.