புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த இளந்தாவடி செங்கல் சோலை அருகே, சுப்பிரமணியன் (45) என்பவர் நேற்று (அக்.26) மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கீரனூர் போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி பிணையில் விடுவித்தனர்.