டூவீலர் திருட்டு போலீசார் விசாரணை
குமாரபாளையத்தில் டூவீலர் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.;
குமாரபாளையம் அருகே கட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 29. தனியார் மில் பணியாளர். இவர் அக். 16ல் இரவு 08:40 மணியளவில், வளையக்காரனூர் பஸ் நிறுத்தம் அருகே, தனது பல்சர் டூவீலரை நிறுத்தி விட்டு, நண்பருடன் பேசிய பின் திரும்ப வந்து பார்க்கும் போது, டூவீலர் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குமாரபாளையம் போலீசில் இவர் புகார் செய்தார். இதன்படி குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன டூவீலரை தேடி வருகின்றனர்.