மாத்தூர் தொட்டி பாலம் உடனடி சீரமைப்பு

கலெக்டர் தகவல்;

Update: 2025-10-28 03:12 GMT
மாத்தூர் தொட்டி பாலம் கைப்பிடி சுவர் உடைந்ததாக செய்திகள் வெளியானது. இதையடுத்து குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மாத்தூர் தொட்டி பாலம் தொட்டி பாலம் கட்டப்பட்டு சுமார் 50 வருடங்களுக்கு மேல் ஆகி உள்ளதால் பாலத்தின் கைப்பிடி மற்றும் மேல் தட்டு பகுதிகளில் சேதம் அடைந்து காணப்படுகிறது. ஆகவே அரசு ஆணைப்படி ரூ 60 லட்சத்தில் நிதி உதவி செய்யப்பட்டு கைப்பிடி சீரமைப்பு ப உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது. நவம்பர் முதல் வாரத்தில்  சீரமைப்பனைகள் ஆரம்பிக்க உள்ளது. என்று செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

Similar News