குமரி மாவட்டம் கொல்லங்கோடு பாத்திமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். அரசு பஸ் டிரைவர். இவருக்கு திருமணம் 25 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் கடந்த 2018 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்து நான்கு மாதமான ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து, ஆனிமோள் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். தற்போது 7 வயதான சிறுமி பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தாயுடன் டிவி பார்த்துக் கொண்டிருந்த சிறுமி திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று, அங்கு டாக்டர் பரிசோதித்த போது சிறுமி உயிரிழந்தது தெரிய வந்தது. கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.