நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 22வது வார்டு கிரைஸ்ட் சர்ச் அருகே உள்ள சாலை பல வருடங்களாக குண்டு குழியுமாக உள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்தும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு. ஏற்கனவே இந்த பகுதியில் சாலை ஓரத்தில் வடிகால் ஓடை இருந்துள்ளது ஆனால் தற்போது தார் சாலை அமைக்கும்போது வடிகால் ஓடையை அடைத்து சாலை அமைக்கப்பட்டதால் மழை காலங்களில் மழைநீர் வடிந்து செல்ல முடியாமல் தண்ணீர் தேங்கி சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதால் தினம்தோறும் விபத்துகளும் ஏற்படுகிறது. இந்த சாலை வழியாகத்தான் பள்ளி மாணவர்கள்,வேலைக்குச் செல்பவர்கள், அவசர மற்றும் அத்தியாவசிய தேவைக்காக செல்பவர்கள் போன்றவர்கள் செல்ல வேண்டி உள்ளது. எனவே உடனடியாக சாலையில் மழைநீர் தேங்காதபடி சாலை ஓரத்தில் ஓடை அமைத்து பழுதாகி காணப்படும் சாலையை செப்பனிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.