ராசிபுரத்தில் பாஜக சார்பில் வாக்கு சாவடி முகவர்கள் பயிலரங்கம்..
ராசிபுரத்தில் பாஜக சார்பில் வாக்கு சாவடி முகவர்கள் பயிலரங்கம்..;
ராசிபுரம் சட்டமன்றத்திற்கான பாஜக பூத் ஏஜெண்டுகளுக்கான பயிலரங்கம் நடந்தது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்டபட்ட பாஜக பி.எல்.ஏ., 2 வாக்கு சாவடி முகவர்கள் பயிலரங்கம் ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ராசிபுரம் நகர தலைவர் வி.வேலு(எ) வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர்கள் வி.சேதுராமன், ஆர். தமிழரசு, மாவட்ட பொதுச்செலாளர் முத்துக்குமார், ஆகியோர் பங்கேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் எஸ்.ஐ.ஆர். திருத்தம் குறித்து விளக்கம் அளித்தனர். தேர்தல் அலுவலர்கள் பணி, பூத் ஏஜெண்டுகள் வாக்காளர் சேர்ப்பது , நீக்குவதில்உள்ள பங்களிப்பு குறித்து விரிவாக கூறினர். மேலும், தேர்தல் வெற்றிக்கு வாக்காளர் பட்டியல் எவ்வளவு முக்கியமானது என்பது குறித்தும், குறிப்பிட்ட தேதிக்குள் படிவங்களை வாக்காளர்களிடம் இருந்து பெற்று அதிகாரிகளிடம் வழங்க வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கினர். மேலும், பூத் ஏஜெண்டுகளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். வாக்காளர் பட்டியலில் எவ்வாறு போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுகின்றனர் என்பது குறித்தும் விளக்கினர். இந்நிகழ்ச்சியில் பா.ஜ., மாநில நிர்வாகி லோகேந்திரன் உள்ளிட்ட மகளீர் அணி நிர்வாகிகள் சுகன்யா நந்தகுமார், சித்ரா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.