திருச்செங்கோடு ரோட்டரி சங்கம்இன்னர் வீல் சங்கம்கே எஸ் ஆர் காலேஜ் ஆப் டெக்னாலஜிஆகியவை இணைந்து நடத்திய சார்பில் இலவச மருத்துவ முகாம்

திருச்செங்கோட்டில் ரோட்டரி சங்கம், ரோட்டரி இன்னர் வீல் சங்கம், கே. எஸ்.ஆர்., காலேஜ் ஆப் டெக்னாலஜி ஆகியவை ஜெம் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.;

Update: 2025-11-09 12:32 GMT
திருச்செங்கோட்டில் ரோட்டரி சங்கம், ரோட்டரி இன்னர் வீல் சங்கம், கே. எஸ்.ஆர்., காலேஜ் ஆப் டெக்னாலஜி ஆகியவை ஜெம் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கான சிறப்பு ம மருத்துவ முகாம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.ரோட்டரி சங்க தலைவர் செல்வக்குமார் தலைமை வகித்தார்.இன்னர் வீல் சங்கத் தலைவர் கவிதா வரவேற்றார். ஜெம் மருத்துவமனை டாக்டர் நவநீதராகவன், டாக்டர் சுதர்சன் ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் உணவுக்குழாய், இரைப்பை, குடலிறக்கம், மலக்குடல், பெருங்குடல், கல்லீரல், கணையம், கணைய அலர்ஜி, குடல் புண், மூலம் , பித்தப்பைக் கற்கள், மஞ்சள் காமாலை மற்றும் குடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் சிறப்பு சிகிச்சை வழங்கினார்கள்.முகாமில் மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கபட்டது.ஆபரேஷன் தேவைப்படுபவர்களுக்கு 50 சதவிகித கட்டண சலுகை வழங்கபட்டது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.இந்த முகாமில் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் நவமணி,ஜெகதீசன், சண்முகசுந்தரம், செயலாளர்கள் சரவணன், பிரியா உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்

Similar News