மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 72 பயனாளிகளுக்கு ரூ.9.65 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.;

Update: 2025-11-10 14:08 GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 72 பயனாளிகளுக்கு ரூ.9.65 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 557 மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தாட்கோ சார்பில் தூய்மை பணியாளர் நல வாரியத்தின் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.1.00 இலட்சம் மதிப்பில் விபத்து காப்பீட்டு நிதியுதவி, 10 தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய அடையாள அட்டைகள், 2022-2023, 2023-2024, 2024-2025-ஆம் கல்வியாண்டுகளில் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைச் சார்ந்த 12 தலைமையாசிரியர்களுக்கு ரூ.7.50 இலட்சம் மதிப்பில் காசேலைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.95,090/- மதிப்பில் மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம், சக்கர நாற்காலி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.19,500/- மதிப்பில் விலையில்ல சலவைபெட்டி ஆகியவற்றினை வழங்கினார்.அதனைத் தொடர்ந்து, தேசிய காசநோய் தடுப்பு கழகம் சார்பில் 75-வது காநோய் வில்லைகளை முழுமையாக விற்பனை செய்து சாதனை செய்த 34 துறைத்தலைவர்களை பாராட்டும் வகையில், சான்றிதழ் மற்றும் கேடயத்தினை வழங்கினார். மேலும், 76-வது காசநோய் வில்லைகளை 48 அரசு துறைத் தலைவர்களுக்கும் பிரித்து வழங்கும் வெளியீட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 05.11.2025 முதல் 09.11.2025 வரை 33 நாடுகள் பங்கேற்ற சென்னை-இந்தியா 23வது ஆசிய மூத்தோர் தடகள சாம்பியன்ஸில் குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டிகளில் நாமக்கல் மாவட்டம் சார்பில் 2 நபர்கள் கலந்து கொண்டு, வெண்கல பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கா.ப.அருளரசு, துணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (காசநோய்) மரு.இர.வாசுதேவன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சு.சுந்தரராஜன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி எஸ்.கலைச்செல்வி, உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News