கும்மியடித்து கையில் தராசு ஏந்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட சாலைப்பணியாளர்கள்.

41 மாத பணி நீக்க காலத்தை நீதிமன்ற ஆணைப்படி பணிக்காலமாக முறைப்படுத்திடக்கோரி சாலைப்பணியாளர்கள் கும்மியடித்து,கையில் தராசு ஏந்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2025-11-10 14:50 GMT
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதனமுறையில் நீதி தராசு கையிலேந்தி கும்மியடி முழுக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும், சென்னை உயர்நீதிமன்ற மேல்முறையீட்டினை திரும்ப பெற வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை களைத்து விட்டு நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பை அரசே நடத்த வேண்டும், கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் நூதன முறையில் கும்மி அடித்து தராசை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News