தங்கம் விற்பனை மோசடியில் ஈடுப்பட்ட பெண் மிரட்டுவதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லாரி புரோக்கர் மனு அளித்தார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த அருள்பிரகாஷ் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.;

Update: 2025-11-10 14:58 GMT
அதில், இரண்டாம் நிலை லாரி விற்பனை தொழில் செய்து வருகிறேன். அவ்வாறு லாரி விற்பனை செய்த வகையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் பழக்கமானார். அவர் குறைந்த விலையில் தங்கக்கட்டி விற்பதாக தெரிவித்தார். எனது நண்பர் வித்யபிரகாஷ் என்பவரிடம் கூறியபோது, அவர் சம்பந்தப்பட்ட தமிழ்ச்செல்வியை நேரில் சந்தித்து பேசினார். இதற்காக ரூ.54 லட்சத்தை தமிழ்ச்செல்வியிடம் வழங்கி உள்ளார். ஆனால் அந்த பெண் தங்கக்கட்டிகளை வழங்காமல் அவரை ஏமாற்றி விட்டார். இது தொடர்பாக, நண்பருக்கு ஆதரவாக கோபி வட்டம், சிறுவரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அந்த பெண் கைது செய்யப்பட்ட நிலையில், அண்மையில் பிணையில் வெளியே வந்த அவர் கணவருடன் சேர்ந்து தற்போது எனக்கு பல்வேறு வகையில் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். சம்பந்தப்பட்ட தமிழ்ச்செல்வி மீது காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Similar News