ரிக் வண்டி பணிக்கு தொழிலாளர்களை அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கான பணத்தை புரோக்கர்கள், தொழிலாளர்கள் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு.

பணத்தை திருப்பி கேட்டால் சாதி அமைப்பினருடன் மிரட்டுகின்றனர்.;

Update: 2025-11-12 10:39 GMT
நாமக்கல் எஸ்.பி அலுவலகத்தில் ரிக் உரிமையாளர்கள் சங்கத்தினர் புகார் மனு. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை தலைமையிடமாக திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 2 ஆயிரம் ரிக் லாரிகளும், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுரேஷ் தலைமையில் ரிக் உரிமையாளர்கள் சங்கத்தினர் 100 க்கும் மேற்பட்டோர் நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் :- தமிழ்நாடு உள்ளிட்ட வடமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் திருச்செங்கோட்டில் இருந்து ரிக் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. ரிக் தொழிலுக்கு ஏஜெண்ட் மூலம் வேலையாட்களை வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றோம் அதன்படி திருச்செங்கோட்டை சேர்ந்த குமரேசபுரத்தை சேர்ந்த சக்திவேல், அவரது மனைவி அபிநயா ஆகிய இருவரும் ரிக் லாரி தொழில் வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாக கூறி ஒவ்வொரு லாரி உரிமையாளர்களிடமும் 3, 4 இலட்சம் என கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்துள்ளனர் மேலும் தொழிலாளர்களும் முன்பணம் வாங்கியுள்ளனர் அவர்களிடமும் பணத்தை திருப்பி கேட்டால் சாதி ரீதியான அமைப்புகளை வைத்து மிரட்டுகின்றனர் எனவே ரிக் லாரி உரிமையாளர்களை ஏமாற்றிய சக்திவேல் அவரது மனைவி அபிநயா மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களிடம் பணத்தை திரும்ப பெற்றுத்தரக்கோரி மனுவில் தெரிவித்திருந்தனர்.

Similar News