ரிக் வேலைக்கு ஆட்கள் ஏற்பாடு செய்து தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி நடவடிக்கை எடுக்க கோரிமையாளர் சங்கத்தினர் டிஎஸ்பி இடம் மனு
ரிக் வண்டி வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி புரோக்கர்களாக செயல்பட்டவர்கள் ரிக் உரிமையாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி என திருச்செங்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப் பாளரிடம் திருச்செங்கோடு ரிக் உரிமையாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்;
திருச்செங்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணனிடம் திருச்செங்கோடு ரிக் உரிமையாளர் சங்கத்தினர் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கம் சுமார் 10,000 உறுப்பினர் கொண்டு செயல்பட்டு வருவதாகவும் இந்த சங்கத்தின்உறுப்பினர்களாக உள்ள ரிக் உரிமையாளர்களை குமரேச புரத்தை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி அபிநயா ஆகிய இருவரும் ரிக் வண்டிக்கு தேவையான ஆட்களைவேலைக்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு சங்ககிரி, கோவை,, மற்றும் விழுப்புரம் போன்ற பகுதிகளில் அழைத்துசென்று அலைக்கழித்ததோடு வேலைக்கு ஆட்களை தராமல் தராமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த செயல்களில் பல புரோக்கர்களும் உடந்தையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டுகின்றனர். தொடர்ந்துஆட்களை அனுப்பவில்லை கொடுத்த பணத்தை திருப்பி கொடுங்கள் என கேட்டால் ஆபாசமாக கொலை மிரட்டல் விடுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இதுவரை 41 நபர்கள் பணத்தை இழந்ததாக ரிக் உரிமையாளர் சங்கத்தில் புகார் மனு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இங்கு மட்டுமல்லாது ஆந்திரா கர்நாடகா பகுதிகளிலும் இதுபோல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் கொடுக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரிக் உரிமையாளர் சங்க லோகோவை தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும் பல கோடி ரூபாய்களைசக்திவேல் மற்றும் அபிநயா ஆகியோரிடம் ரிக் உரிமையாளர்கள் இழந்து உள்ளதாகவும் அதனை அவர்களிடமிருந்துமீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.புகார் மனுவை பெற்றுக் கொண்ட திருச்சங்கோடு டிஎஸ்பி கிருஷ்ணன் பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புகார் மனு கொடுக்கும் படியும் ரிக் உரிமையாளர்கள் லோகோவை தவறாக பயன்படுத்தியதாக ரிக் உரிமையாளர் சங்கத்தினர் தனியாக புகார் கொடுக்கும் படியும் அனைத்து புகார்களையும் ஒன்றிணைத்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைஎடுப்பதாகவும் ரிக் உரிமையாளர்களிடம் டிஎஸ்பிகிருஷ்ணன் தெரிவித்தார்.