கிருஷ்ணராயபுரம் அருகே ஜல்லிக்கற்களுடன் நிற்கும் தார்சாலைப்பணியை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

கிருஷ்ணராயபுரம் வயலூர் கிராமத்தில் இருந்து தனியார் சோலார் நிறுவனம் வழியாக வரகூர் செல்லும் தார் சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தார்சாலை போடுவதாக ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டு கிருஷ்ணராயபுரம் யூனியன் நிர்வாகம் கிடப்பில் போட்டுள்ளது.;

Update: 2025-11-12 11:48 GMT
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்ப்பட்ட வயலூர் ஊராட்சி வயலூரில் இருந்து வரகூர் வரை மண் சாலை செல்கிறது. இச்சாலை வழியாக செல்லும் தாளியாம்பட்டி, வேங்காம்பட்டி, மேட்டுப்பட்டி, வரகூர், குழந்தைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பொதுமக்கள் வயலூர் கிராமத்திற்கு செல்லும் போது இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல் பஞ்சப்பட்டி, சுரக்காய்ப்பட்டி,கொமட்டேரி, வீரியம்பாளையம், வெள்ளப்பட்டி,நடுப்பட்டி கிராம மக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். மண் சாலையாக இருந்த இந்த சாலையை தார்சாலையாக மாற்ற பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தார்ச் சாலை அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஜல்லி கற்கள் பரப்பிய நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும் குழியுமாகவும் இருந்து வருவதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம், வயலூர் வரகூர் சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News