பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ. 1.40 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப்பணிகள் ஆய்வு.;
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடிக்கால் புதூர் பகுதியில் தூசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை ஆய்வு மேற்கொண்டு, ரூ.35.25 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி, பழைய பாளையம் பகுதியில் ரூ.99.65 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு கிலோ மீட்டர் நீளத்திற்கு பழையபாளையம்-கொல்லிமலை சாலையில் நடைபெற்று வரும் சாலை பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பவித்திரம் புதூர் கிராமத்தில் உள்ள நீர் நிலைகளை பார்வையிட்டு நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் மேலும் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களை அறிவுறுத்தினார்.