கிருஷ்ணராயபுரம் அருகே பிள்ளபாளையம் பிடாரி அம்மன் கோயில் பாதையில் தார்சாலை அமைக்க வேண்டும்

பொதுமக்கள் கோரிக்கை;

Update: 2025-11-13 06:47 GMT
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் பிள்ளபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த எட்டுப்பட்டி ஊர் மக்கள் வழிபடும் மிகவும் பிரசித்தி பெற்ற பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் தினந்தோறும் பொதுமக்கள் கிடா வெட்டியும்,பொங்கல் வைத்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர் மேலும் கோவிலை சுற்றி சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நெல்,வாழை வெற்றிலை கொடிக்கால் ஆகியவையை விவசாயமும் செய்து வருகின்றனர் இதனால் தற்போதுள்ள உள்ள சாலையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து மிக நீண்ட சாலையாக இருந்த பாதையை தற்போது குறுக்கி கோவிலுக்குச் செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளன.சில இடங்களில் மண்சாலைகள் கூட மழைக்காலங்களில் பயன்படுத்த முடியாதபடி சேதமடைந்துள்ளது.மேலும் போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் விவசாயப் பொருட்களை தலைசுமையாக சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது எனவே பக்தர்களின் சிரமத்தை நீக்கி போதிய தெரு விளக்குகள் அமைத்து தரவும்,விவசாயப் பொருட்களை எளிதாக கொண்டு செல்லவும்,கோவிலுக்கு செல்லும் பாதையை தார்சாலையாக அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும்,கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து பார்த்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர் உடனடியாக அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் பொதுமக்களை ஒன்று திரட்டி அடுத்தகட்ட போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர்

Similar News