விளம்பரங்களில் பெயர் போடாதது எதேச்சையாக நடந்தது திட்டமிட்ட செயல் அல்ல எல்லாவற்றையும் ஜாதியாக பார்க்க வேண்டாம்திருச்செங்கோட்டில் ஆதி திராவிடர்நலத்துறைஅமைச்சர் மதிவேந்தன் பேட்டி

விளம்பர தட்டியில் எதேச்சையாக அல்லது தவறுதலாக படம் விட்டு போய் இருக்கலாம் இதனை பெரிது படுத்த கூடாது.எல்லாவற்றையும் ஜாதி ரீதியாக பார்க்ககூடாது திருச்செங்கோட்டில் கால்நடை துறை மருத்துவமனையை திறந்து வைக்க வந்த ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேட்டி;

Update: 2025-11-13 12:45 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ரூ 89 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்நடை மருத்துவமனை மற்றும் திருச்சங்கோடு மற்றும் பரமத்தி வேலூர் உட்பட்ட பகுதியிலுள்ள மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில்  25 இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். இதேபோல்அருகிலுள்ள வேளாண்மை துறை அலுவலகத்தில் வேளாண்மை துறை சார்பில் தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை தேசியதோட்டக்கலை இயக்கம் சார்பில் நடமாடும் காய்கறி தள்ளுவண்டி கடைகளைபயனாளர்களுக்கு அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார் நிகழ்ச்சியில்நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி, மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) சுப்பிரமணியம் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பரமத்தி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் மூர்த்தி, திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு,திருச்செங்கோடு மேற்கு நகர திமுக செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன்,நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு,கிழக்கு நகர திமுக செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர்ராயல் செந்தில், திருச்செங்கோடு ஒன்றிய திமுக செயலாளர் வட்டூர் தங்கவேல் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் இளங்கோவன் வடக்கு ஒன்றிய செயலாளர் நாச்சி முத்து மத்திய ஒன்றிய செயலாளர் தளபதி செல்வம், திருச்செங்கோடு நகர மன்ற உறுப்பினர்கள் செல்வி ராஜவேல்  சினேகா ஹரிகரன், சண்முகவடிவு, செல்லம்மாள் தேவராஜன், மகேஸ்வரி,முருகேசன், புவனேஸ்வரி உலகநாதன், சுரேஷ்குமார்திருச்செங்கோடு கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவமனை மருத்துவர் பார்த்தசாரதி ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன்கூறியதாவது  திருச்செங்கோட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் ஜாதி ரீதியாக பாகுபாடு பார்த்து அமைச்சர் மதிவேந்தன் படங்கள் விளம்பரங்களில் இடம் பெறுவதில்லை என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.இதற்கு தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட அரிஜன சமூக அமைப்பு சார்ந்த இயக்கங்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன இதற்கு உங்கள் கருத்து என்ன எனவும் பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு காலதாமதமாக வருகிறீர்கள் காலை 10 மணிக்கு வந்த மாற்றுத் திறனாளிகள் இரண்டு மணி வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு ஒரே மந்திரியாக இருந்தும் திருச்செங்கோடு அரசு நிகழ்ச்சிகளில் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்கு பெறுவதில்லையே ஏன் என செய்தியாளர்கள் சரமாரியாக கேட்டதற்குஜாதி ரீதியான பாகுபாடு பார்க்கப் படுவதில்லை ஏதாவது ஒரு விளம்பர தட்டியில் எதேச்சையாக அல்லது தவறு தலாக படம் விட்டு போய் இருக்கலாம் இதனை பெரிது படுத்த கூடாது.தமிழ் புலிகள் போன்ற கட்சிகள் மட்டும் இல்லாது எனது ஆதரவாளர்கள் சிலரும் இதுகுறித்து என்னிடம் தொலைபேசியில் கேட்டபோது கூட ஏதோ தவறுதலாக நடந்திருக்கலாம் இதை பெரிது படுத்த வேண்டாம் என அவர்களை சமாதானப்படுத்தி இருக்கிறேன் இதனை அரசியல் ஆக்க கூடாது ஒரு விளம்பரத்தடியில் எனது படமும் பெயரோ இல்லாததால் அது தவறுதலாக நடந்திருக்குமே தவிர வேண்டுமென்று நடந்ததில்லை. இதனை பெரிதுபடுத்த வேண்டாம்.அனைத்தையும் ஜாதி ரீதியாக பார்க்க கூடாது. அதேபோல் நிகழ்ச்சிகளுக்கு வேண்டுமென்றே காலதாமதமாக வருவதில்லை வேறு நிகழ்ச்சிகள் ஏதாவது இருந்தால் சில நேரங்களில் இது போல் காலதாமதம் ஏற்படுகிறது. இன்று கூட ஐசிஆர் இல் இருந்து ஒரு ஒட்டுண்ணி வெளியிடுவதற்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் நானும் பாராளுமன்ற உறுப்பினரும் அங்கு சென்று விட்டு வர காலதாமதம் ஆகிவிட்டது  அவ்வாறு காலதாமதமாகும் போது காத்திருப்பவர்களுக்கு தேவையான குடிநீர் உணவு வசதிகள் செய்து தர அறிவுறுத்தப் பட்டிருக்கிறது வழங்கியும் இருக்கிறார்கள்.அமைச்சர் என்கிற முறையில் மாவட்டத்தில் நடக்கிற அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறேன் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாமே தவிர மற்றபடி எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தான் இருக்கிறேன் என அமைச்சர் மதிவேந்தன்  கூறினார்.

Similar News