உயிரிழந்த திமுக கட்சி குடும்பத்தினருக்கு நலநிதி உதவி எம்பி ராஜேஷ்குமார் வழங்கல்...

உயிரிழந்த திமுக கட்சி குடும்பத்தினருக்கு நலநிதி உதவி எம்பி ராஜேஷ்குமார் வழங்கல்...;

Update: 2025-11-14 16:12 GMT
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் உயிரிழந்த திமுக கட்சி குடும்பத்தினருக்கு குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி பேரூராட்சி பகுதிகளில் உயிரிழந்த கட்சியினரின் குடும்பத்தினருக்கு நல உதவிகள் வழங்கினார். நாமகிரிப்பேட்டை பேரூராட்சி பகுதியில் 35 குடும்பத்தினருக்கும், சீராப்பள்ளி பகுதியில் 13 பேர் என மொத்தம் 48 குடும்பத்தினருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.4.80 லட்சம் நிதியுதவி வழங்கினார். தொடர்ந்து இறந்தவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நாமகிரிப்பேட்டை பேரூர் செயலர் அன்பழகன், சீராப்பள்ளி பேரூர் செயலர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Similar News