ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் பண்டிகை முன்னிட்டு சாமி ஊர்வலம் பக்தர்கள் தரிசனம்..
ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் பண்டிகை முன்னிட்டு சாமி ஊர்வலம் பக்தர்கள் தரிசனம்..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் ஐப்பசி மாத பண்டிகை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தினந்தோறும் பல்வேறு கட்டளைதாரர்கள் சார்பில் அம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விடையாற்றி கட்டளையை முன்னிட்டு தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் உற்சவம், மற்றும் முருகப்பெருமானின் மயில் சிறப்பு அலங்காரத்துடன் திருத்தேர் திருவீதி உலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..