தூய்மை பணியாளர்களை தமிழக அரசு நிரந்தரம் செய்து, அவர்களுக்கு உண்டான உரிமைகளை அளிக்க வேண்டும்! நாகை. திருவள்ளுவன் வலியுறுத்தல்!

ஈரோடு மாநாடு தி.மு.க., கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு வழிவகுப்பதாக அமையும்.இந்த மாநாட்டில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க அறைக்கூவல் விடுத்துள்ளோம்.;

Update: 2025-11-15 15:42 GMT
ஈரோட்டில் ஜனவரி.,4-ல், தமிழ் புலிகள் கட்சியின் மாநில மாநாடு நடைபெறுகிறது.இதையொட்டி நாமக்கல், இராசிபுரம் சேந்தமங்கலம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான வெல்லும் தமிழ்நாடு மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள கட்டபொம்மன் ஹோட்டலில் நடைபெற்றது.மாவட்ட செயலர்கள் குமரவேல், வினோத்சேகுவேரா ஆகியோர் வரவேற்றனர். தமிழ் புலிகள் கட்சி நிறுவன தலைவர் நாகை.திருவள்ளுவன், ஈரோடு மாநாடு குறித்து கட்சியினரிடையே பேசினார்.தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது...
Advertisement
தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் 2026-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி ஈரோட்டில் வெல்லும் தமிழ்நாடு மாநாடு இரண்டு முக்கிய நோக்கங்களுக்காக நடத்தப்படுகிறது, தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்க கூடிய பாஜக நேரடியாகவோ, மறைமுகமாகவோ தமிழ்நாட்டில் கால் ஊன்ற நினைக்கும் முயற்சியை தடுக்க இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.கல்வி, வேலைவாய்ப்பில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் திமுக செயல்பட்டு வரும் நிலையில் அரசியலிலும் சமூகநீதியை நிலை நாட்டும் வகையில் 8 சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவிக்க உள்ளோம், குறிப்பாக மேற்கு மண்டலங்களில் தனி, பொதுத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவிக்க உள்ளோம். இந்த மாநாட்டில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க அறைக்கூவல் விடுத்துள்ளோம்.
ஈரோடு மாநாடு தி.மு.க., கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு வழிவகுப்பதாக அமையும்.
2024 லோக்சபா தேர்தலையொட்டி, நாமக்கல்லில் நடந்த மாநாட்டில் அப்போது நாங்கள் வைத்த கோரிக்கைகள் சிலவற்றை, தி.மு.க., அரசு நிறைவேற்றி கொடுத்துள்ளது.பட்டியலின மக்கள் தூய்மை தொழிலை கைவிட வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு போராட்டங்களை நடத்தி வருகிறோம், வருங்காலங்களிலும் அரசுக்கு இந்த அழுத்தத்தை ஏற்படுத்துவோம் என அவர் தெரிவித்தார்.இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்த நாமக்கல், இராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய மூன்று தொகுதிகளில் இருந்து மாநில, மண்டல, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, கிளை செயலாளர்கள் துணைநிலை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News