வேப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தற்காப்புக்கலை பயிற்சி நிறைவு விழா...
வேப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தற்காப்புக்கலை பயிற்சி நிறைவு விழா...;
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், வேப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்று வந்த தற்காப்புக் கலை பயிற்சி நிறைவு பெற்று மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இப்பள்ளியில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் குடிந்தைகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரந்தோறும் 3 மணி நேரம் வீதம் மொத்தம் 36 மணி நேரம் தற்காப்புக் கலை பயிற்சி, தலைமை பயிற்சியாளர் திரு. சரவணன் அவர்களால் வழங்கப்பட்டது. இந்த பயிற்சி நிறைவு பெற்றதை அடுத்து மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் தலைமையாசிரியர் திரு.க.நடராஜன், பயிற்சியாளர் சரவணன், மற்றும் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்து அனைவரையும் பாராட்டி சிறப்பித்தனர்.